யேர்மனியில் இணையவழியாக அன்னை பூபதித்தாயின் கவிதைப்போட்டி-16.4.2022

1547 0

தன்னிறைவு கொண்ட தாயகத்தையும், தொன்மையான மொழியையும், தனித்துவமான வரலாற்றுப் பின்னணியையும், கலை, பண்பாடுகளையும் கொண்டிருந்த உலகின் மூத்த இனம் தமிழினம். சிங்கள பௌத்த பேரினவாதம் ஒரு இனஅழிப்புப் போரை எம்மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை எதிர்த்துப் போராட வேண்டிய நிலைக்கு ஈழத்தமிழராகிய நாம் தள்ளப்பட்டோம். அத்தகைய விடுதலைப் போரிலே தங்கள் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் தியாகங்களை என்றென்றும் போற்ற வேண்டியது ஈழத்தமிழர்களாகிய எமது கடமையாகும்

அவ்வகையில் யேர்மனிய மண்ணில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களதும், இளையோரினதும், சிறார்களதும் கவிபாடும் ஆற்றலை வளர்த்தெடுப்பதற்காக அன்னை பூபதி நினைவுக் கவிதைப்போட்டி நடாத்தப்படுகின்றது. போட்டியில் வயதுப்பிரிவுகளின் அடிப்படையில் அனைவரும் பங்குபற்றலாம். போட்டியாளர்கள் கீழேதரப்பட்டவாறு வயதுப்பிரிவுகளுக்கமைய தரப்பட்ட நேரத்திற்குள், தரப்பட்ட வரிகளின் எண்ணிக்கைக்குக் குறையாமல், கவிதைகளினை எழுதி, பாடிக்காண்பித்தல் வேண்டும்.

விண்ணப்பபடிவம் இங்கே தரையிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பபடிவம்.

பிரிவுகள்

1. அதிகீழ்ப்பிரிவு – 6 வயது முதல் 7வயது வரை ( 01.01.2014 – 31.03.2015 வரையில் பிறந்தோர் )
6 வரிகள்.

2. கீழ்ப்பிரிவு 8 வயது முதல் 11 வயதுவரை (01.01.2010 – 31.03.2013 வரையில் பிறந்தோர்)
8 வரிகள்.

3. மத்திய பிரிவு 12 வயது முதல் 15 வயதுவரை (01.01.2007 – 31.03.2010 வரையில் பிறந்தோர்);
12 வரிகள்.

4. மேற்பிரிவு 16 வயது முதல் 20 வயதுவரை (01.01.2001 – 31.03.2005 வரையில் பிறந்தோர்)
16 வரிகள்.

5. அதிமேற்பிரிவு 21 வயதும் அதற்கு மேலும் (31.12.2000 ஆம் நாளும் அதற்கு முன்பும் பிறந்தோர்);
24 வரிகள்.