புதையல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

312 0

மொனராகலை, தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக எட்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 59 வயதுடைய தம்பகல்ல, கண்டி, பேராதனை மற்றும் மெதகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேகநபர்கள் இன்று10.03.2022 மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.