தனிநபர் தரவுப் பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

225 0

தனிநபர் தரவுப் பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றில் இன்று (09) திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சரும், டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவினால் பாராளுமன்றில் இன்று சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தரவைச் செய்முறைப்படுத்துவதனை ஒழுங்குபடுத்துவதற்காக ஏற்பாடு செய்வதற்கும், தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல் தொடர்பாகத் தரவுடன் தொடர்புபட்டோரின் உரிமைகளை அடையாளங்காண்பதற்கும் பலப்படுத்துவதற்கும்; தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையைப் பெயர் குறிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடுசெய்வதற்குமானதொரு சட்டமாக இது அமையும்.