நபர் ஒருவர் அடித்துக் கொலை

265 0

அம்பலாங்கொட, கந்தேகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 5ஆம் திகதி இரவு முச்சக்கர வண்டியொன்றில் வாடகை பயணம் சென்று உறவினர் வீட்டில் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு மீண்டும் வீடு திரும்பும் போது கந்தேகொட புகையிரத கடவைக்கு அருகில் வைத்து குறித்த நபரை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, கந்தேகொட பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கந்தேகொட அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவர் இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (07) பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.