கோட்டே மாநகர சபை ஊழியர்கள் வெலிக்கடையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பத்தரமுல்லை நோக்கிய வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோட்டே மாநகர சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் நீதி வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தி குறித்த குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டே மாநகர சபை ஊழியர் ஒருவர் நேற்று (04) வீதியில் குப்பைகளை சேகரிக்கும் போது மோட்டார் வாகனத்தில் வந்த ஒருவரால் தாக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடு செய்த போதிலும் நீதி கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக நாவல வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

