மற்றுமொரு டீசல் தாங்கிய கப்பல் இன்று நாட்டிற்கு வருகின்றது!

239 0

28,300 மெற்றிக் தொன் டீசல் தாங்கிய கப்பலொன்று, இன்று(வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நேற்றைய தினம் 37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

குறித்த டீசலை, இன்றைய தினத்துக்குள் முத்துராஜவளை களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்த முடியும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என அந்த அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.