ஹெரோயினுடன் ஒருவர் கைது

310 0

திருகோணமலை – கொட்பே மீன்பிடி கிராமத்தில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் திருகோணமலை பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று (26) மாலை குறித்த சந்தேகநபரைச் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 7 கிலோகிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய குடும்பஸ்தர் ஆவர். கைது செய்யப்பட்ட குறித்த நபரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.