சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்பு

328 0

கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவி ஏற்றுக்கொண்டார்.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் கடந்த நவம்பர் மாதம் 22-ந் தேதி பதவி ஏற்று இருந்தார்.

கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்திருந்தார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரையின் பேரில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரியை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.

இதைத் தொடர்ந்து கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, தலைமைச்செயலாளர் இறையன்பு, உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.