டொக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை, சாய்ந்தமருதில் நாளை வெள்ளிக்கிழமை (11) திறந்து வைக்கப்படவுள்ளது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரிஷான் ஜமீல் தலைமையில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் கலந்துகொள்ளவுள்ளார்.
சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள பரடைஸ் விடுதியில் இவ் வைத்தியசாலை திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

