மீட்சிக்கான பாதையில் அடுத்த அத்தியாயத்தை நாங்கள் தொடங்குவோம் என்று சுற்றுலாத்துறை செயலாளர் பெர்னா ரோகுலோ-புயாட் கூறினார்.
உலகளவில் கொரோனா மற்றும் அதன் மாறுபாடான ஒமைக்ரான் உள்ளிட்ட தொற்றுகளின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு பயணிககளை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த நிலையில், கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டது. சமீப நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருதால், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கி வருகிறது.

