நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக சின்னத்துடன் கூடிய வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

189 0

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னத்துடன் பெயரை பொறிக்கும் பணி இன்று தொடங்கியது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்பட்ட நிலையில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் பொருத்த சின்னத்துடன் கூடிய வேட்பாளர் பட்டியல் மற்றும் தபால் வாக்குப் பதிவுக்கு தேவையான  வாக்குச் சீட்டுகள்  அச்சடிக்கும்  பணி கள் தொடங்கி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநக ராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 618 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் நரசிங்க புரம், எடப்பாடி, மேட்டூர், தாரமங்கலம், இடங் கணசாலை ஆகிய 6 நகராட்சி களிலும் 682 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மேலும் 31 பேரூராட்சி களில் உள்ள 474 வார்டுகளில் மேச்சேரி, தெடாவூர்,   கொளத்தூர் பேரூராட்சிகளில் மொத்தம் 4 வார்டுகளில் 4 பேர் போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்ட  நிலையில் 470 வார்டுகளில்  மொத்தம் 1,906 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தமாக 695 வார்டுகளில் மொத்தம் 3,206 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இறுதி செய்யப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தேர்தல் வாக்குப் பதிவு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் நடைபெற உள்ளது.
எனவே மின்னணு வாக்குப்  பதிவு எந்திரங்களில் பொருத்துவதற்காக சின்னத் துடன் கூடிய வேட்பாளர்கள் பெயர் பட்டியல் மற்றும் தபால்  வாக்குப்பதிவுக்கு தேவையான   வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் பிரிவு  அலுவலர்கள் கூறும்போது, சின்னத்துடன் கூடிய வேட்பாளர்கள் பெயர் பட்டியல் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு அவை மாவட்டத்தில் உள்ள அரசு அச்சகத்துக்கு அனுப்பப்பட்டு  வருகிறது என்றனர்.