கொரோனா வைரஸ் பரவி வரும் வேளையில் பொது ஒன்றுகூடல்களை நடத்துவது பொருத்தமற்றது என பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனவே, அவற்றை ஏற்பாடு செய்பவர்களும், அதில் பங்கேற்பவர்களும் இந்தப் பொறுப்பை மனதில் கொள்ள வேண்டும் என்றார்.
சுகாதார அமைச்சில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

