மருந்து தட்டுப்பாடு குறித்து தெளிவுப்படுத்திய அமைச்சு!

133 0

நாட்டில் மருந்து தட்டுப்பாட்டைத் தடுப்பதற்கு தேவையான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைக்கான இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள மருந்துகளின் தேவையை கருத்திற் கொண்டு குறிப்பிட்ட கால அவகாசத்தின் அடிப்படையில் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு டொலர்களின் தேவை குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னைய அறிவிப்புகளின்படி, மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு மத்திய வங்கி 7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது என இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையை சமாளித்து மருந்து தட்டுப்பாட்டை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.