சுகாதார அமைச்சில் பதற்றநிலை…!

258 0

டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர் சங்கத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று சுகாதார அமைச்சின் வளாகத்துக்குள் பிரவேசித்துள்ள நிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பள அதிகரிப்பு மற்றும் பணி நிரந்தரம் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து அந்த சங்கத்தினால் இன்று பிற்பகல் விஹார மகாதேவி பூங்காவுக்கு அருகில் எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.

பின்னர் அவர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்திற்கு வந்து தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸாரின் அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.