நஞ்சற்ற முறையில் செய்கை பண்ணப்பட்ட பப்பாசி அறுவடை

178 0

திருகோணமலை வலய கல்வி அலுவலகத்தில் நஞ்சற்ற முறையில் செய்கை பண்ணப்பட்ட பப்பாசி அறுவடை, வலய கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் தலைமையில் இன்று (09) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க அதிதியாக கலந்துகொண்டு, அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்கா, சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஏ.ஜே.முரளிதரன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டு பப்பாசி அறுவடை செய்தனர்.

இங்கு நட்டு வைக்கப்பட்டு பயன்பெற்ற பப்பாசி மரங்களுக்கான விதைகளை, புத்தளம் மாவட்டத்தில் இருந்து குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் பெற்றுக்கொடுத்திருந்தார்.

அரசாங்கத்தின் நஞ்சற்ற உணவு உற்பத்தி திட்டத்துக்கு அமைவாக அலுவலகங்களிலும் உணவுற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருகோணமலையில் வலய கல்வி அலுவலகம் இதற்கு முன்மாதிரியாக விளங்குகிறது.