தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்திஸ்ரீ வீரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் ராகம மருத்துவபீட மாணவர்களை தாக்கிய சம்பவத்தில் தென்னை அபிவிருத்தி சபையின் வாகனமொன்றும் சாரதியும் தொடர்புபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

