முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாற்றீடாக புதிய நான்கு சக்கர வாகனம் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சந்தைக்கு குறித்த வாகனத்தை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த நான்கு சக்கர வாகனத்தின் விலையானது சுமார் 12 இலட்சம் ரூபாவாகும்.
வாகனத்தில் ஐந்து பேர் பயணிக்க முடியும் என்று கூறிய உற்பத்தியாளர்கள், இதில் 200 சி.சி எஞ்சின் உள்ளதாகவும், மொத்தம் 814 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்றும் கூறியுள்ளனர்.

