ராகம மருத்துவ பீடத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள பல்கலைக்கழக நிர்வாகத்தினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் நிலாந்தி டி சில்வா எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்தார்.
அதன்படி, சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விசாரணைக் குழுவிற்கு அழைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
பின்னர் அந்த குழு நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆம் திகதி காலை நான்காம் வருட மாணவர்கள் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று ராகம மருத்துவ பீட விடுதியின் மீது இரண்டு கார்களில் வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

