இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

260 0

தெஹிவளை கல்தேரா வீதியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தெஹிவளை கல்தேரா வீதியில் வசிக்கும் 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.