முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபராதம்

230 0

அனுமதியின்றி உத்தியோர்கபூர்வ இல்லங்களில் தங்கியிருந்தமைக்காக செலுத்தவேண்டிய உரிய அபராதத் தொகையை விரைவில் செலுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேருக்கு பாராளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த பின் தமது உத்தியோர்கபூர்வ இல்லங்களைவிட்டு வெளியேறாது, இதுவரையில் அபராதத்தையும் செலுத்ததாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேருக்கே இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் நீர் மற்றும் மின்சாரக்கட்டணங்களையும் உடனடியாக செலுத்துமாறு இரண்டாவது தடவையாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் , இவ்வறிப்புக்களை அவர்கள் புறக்கணித்தால் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைமை ஏற்படுமென பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

அனுமதியின்றி உத்தியோர்கபூர்வ இல்லத்தில் ஒருநாள்  தங்குவதற்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.