டென்மார்கில் இலங்கையின் சுகந்திரதினத்திற்கு எதிராக போரட்டம்!

173 0

இன்று (04.02.2022) இலங்கை சுதந்திரம் அடைந்த 74 ம் ஆண்டு நிறைவு நாளாக சிறிலங்கா அரசாங்கம் கொண்டாடும் அதேவேளை, ஈழத் தமிழினத்தின் மீதான ஒடுக்குமுறைக்கும், இனவழிப்புக்கும் வித்திட்ட கரிநாளாக உலகத் தமிழினம் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சர்வதேச அரசுகளிடம் தமிழின அழிப்பிற்கு எதிராக நீதி கோரி டென்மார்க்கின் தலைநகரில் டென்மார்க் வாழ் தமிழர்களால் உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.

டென்மார்க்கின் பாராளுமன்றம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு தொடர்ந்து பேரணியாக தமிழீழத்தேசியக் கொடி, கறுப்புக் கொடி மற்றும் பதாகைகளுடன் தலைநகரின் வீதிகளூடாக வெளிநாட்டு அமைச்சகத்தை சென்றடைந்து அங்கும் கவனயீர்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து எழுச்சி உரைகளுடன், டென்மார்க் வெளிநாட்டு அமைச்சுக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற எழுச்சிக் கோசத்தின் பின்னர் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

இப் பேரணியானது டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டது.