பெரியகுளம் நகர்மன்ற தேர்தலில் ஓ.பி.எஸ். சகோதரர் போட்டி

263 0

பெரியகுளம் நகராட்சியில் 24வது வார்டுக்கு அறிவிக்கப்பட்ட ராஜேந்திரனுக்கு பதிலாக ஓ.பன்னீர்செல்வத்தின் 4வது சகோதரர் ஓ.சண்முகசுந்தரம் அறிவிக்கப்பட்டு அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் 1996ல் அ.தி.மு.க. நகராட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம் வெற்றிபெற்றார். அதன் பிறகு தமிழக முதல்வர், எதிர்கட்சிதலைவர், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் போன்ற பல்வேறு பதவிகளுக்கு சென்றார்.

இவரது சகோதரர் ஓ.ராஜா அதே ஆண்டு அதி.மு.க. வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார். 2011ல் நகராட்சி தலைவராக ஓ.ராஜா வெற்றி பெற்றார். மேலும் தேனி ஆவின் தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில் பெரியகுளம் நகராட்சியில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 30 பேர் அறிவிக்கப்பட்டனர். அதில் 24வது வார்டுக்கு அறிவிக்கப்பட்ட ராஜேந்திரனுக்கு பதிலாக ஓ.பன்னீர்செல்வத்தின் 4வது சகோதரர் ஓ.சண்முகசுந்தரம் அறிவிக்கப்பட்டு அவர் பெரியகுளத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.