வடமேற்கு சிரியாவில் அமெரிக்க சிறப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் ஜிஹாதிஸ்ட் குழுவான இஸ்லாமிய அரசு (IS) தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இஸ்லாமிய அரசின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஜோ பிடன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், “எங்கள் ஆயுதப் படைகளின் திறமை மற்றும் துணிச்சலுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ள அவர், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அனைத்து அமெரிக்கர்களும் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளதாகவும் கூறினார்.

