அருந்திக இராஜினாமா: கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார்

259 0

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தமது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தனது இராஜனாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.

ராகமையில் அமைந்துள்ள, தங்குமிட விடுதியில் வைத்து  களனி பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் வரையில்,  தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது