தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மறைக்கவே தி.மு.க. மக்களை திசைதிருப்ப முயற்சி செய்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழர் தமிழர் என்று சொன்னால் ராகுல்காந்தி தமிழர் ஆகிவிடுவாரா? அதற்கு முகாந்திரம் இல்லை.
தேர்தல் நேரத்தில் சமூக நீதி, தமிழின பிரச்சினையை தி.மு.க. கையில் எடுத்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மறைக்கவே தி.மு.க. மக்களை திசைதிருப்ப முயற்சி செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

