திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீனாக்கேணிக் கிராமத்தில் தமது தோட்டத்தில் காவலுக்காக தங்கியிருந்த கணவன், மனைவி இருவரையும் யானை தாக்கியதில் காயமடைந்த நிலையில் இருவரும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (03) அதிகாலையில் நடைபெற்ற இச்சம்பவத்தில் பேச்சி முத்தன் மகாலிங்கம் (60 வயது), மகாலிங்கம் சரோஜாதேவி ( 55 வயது) ஆகியோரே காயமடைந்த நிலையில் கிராம மக்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

