வவுனியாவில் வீதியினை மறித்து கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

364 0

vavuniyaவவுனியா நகரசபைக்கு எதிராக வியாபாரிகள் வீதிக்கு குறுக்காக படுத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா நகரசபை அதிகாரிகள் நடைபாதை வியாபாரிகளின் பொருட்களை முன் அறிவித்தல் இல்லாமல் பறிமுதல் செய்ததால் வியாபாரிகள் வீதிக்கு குறுக்காக படுத்து தர்னா போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

நடைபாதை வியாபாரிகளை அகற்றும் பணியை மேற்கோண்ட நகரசபை அதிகாரிகள், இலுப்பையடிச்சந்தியில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளின் பொருட்களை எடுத்துச் சென்றனர்.

இதனால் கவலையடைந்த வியாபாரி ஒருவர் வீதியின் குறுக்காக படுத்து தனது பொருட்களை திருப்பிக்கொடுக்கும்வரை எழுந்திருக்க போவதில்லையென்று தெரிவித்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு ஆதரவாக மற்றோருவியாபாரியும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.சம்பவ இடத்திற்கு வருகைதந்த போக்குவரத்து பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் பொருட்களை நகரசபை அதிகாரிகளிடமிருந்து பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கி போக்குவரத்தை சீர்செய்திருந்தனர்.