ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரி, ஊடக அமைப்புக்களினால் கறுப்பு ஜனவரி இன்று (28) அனுஷ்டிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் படங்கள் கறுப்பு ஜனவரியை அனுஷ்டிக்கும் வகையில், கொழும்பு − கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

