வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் பற்றைக்காடுகளை துப்பரவு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டச் செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இச் நடவடிக்கை அண்மையில் விடுவிக்கப்பட்ட குரும்பசிட்டி மற்றும் கட்டுவன் ஆகிய பகுதிகளிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த பகுதியானது கடந்த 26 வருடங்களுக்குப் பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் பற்றைக்காடுகள் போல் காட்சியளிக்கின்றன.
இதனால் பொது மக்கள் குறித்த பகுதியில் உள்ள தமது காணிகளை இனங்கண்டு கொள்வதில் சிரமங்களை எதிர் கொள்ளுகின்றார்கள்.
இதனாலேயே அங்குள்ள பற்றைக்காடுகளை பைக்கோ இயந்திரத்தின் மூலம் துப்பரவு செய்யும் நடவடிக்கையினை யாழ்.மாவட்டச் செயலகம் மேற்கொண்டு வருகின்றது.




