இரவு நேர ஊரடங்கு – மாமல்லபுரம் நாட்டிய விழா நேரம் மாற்றம்

515 0

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் விழா முடிந்து வீடு திரும்பும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நாட்டிய விழா நேரம் மாற்றப்பட்டு உள்ளது.

மாமல்லபுரம் இந்திய நாட்டிய விழா கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. இந்த விழா வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் மாலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணி வரை நடத்த சுற்றுலாத்துறையினரால் திட்டமிடப்பட்டு நடந்து வந்தது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் விழா முடிந்து வீடு திரும்பும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நாட்டிய விழா நேரம் மாற்றப்பட்டு உள்ளது.
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.