வற்வரி இன்றுமுதல் 11 வீதமே அறவிடப்படும் – ரவி கருணாநாயக்க

490 0

ravi-640x400வற்வரி இன்றுமுதல் 11 வீதமே அறவிடப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.உயர் நீதிமன்றம் நேற்றுவழங்கிய தடையுத்தரவினையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வற்வரி அதிகரிப்பு மற்றும் தேசிய கட்டுமான வரி ஆகியவற்றை நிறுத்துமாறு கடந்த திங்கட்கிழமை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வரி மறுசீரமைப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்த நீதிமன்றம், மனு மீதான விசாரணை முடியும்வரை இந்த இடைநிறுத்தல் உத்தரவு அமுலில் இருக்கும் என்று தெரிவித்திருந்தது.இந்நிலையில், எதிர்வரும் 23 ஆம் திகதி வற் வரி அதிகரிப்புக்கு நாடாளுமன்ற அனுமதி கிடைக்கும் வரை மேலதிக வரி அறவிடப்படமாட்டாது எனவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, முன்னர் இருந்ததைப்போன்று பொருட்கள், சேவைகள் அனைத்துக்கும் நாடாளுமன்ற அனுமதி கிடைக்கும்வரை 11 வீத வரியே அறவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த மேமாதம் 2ஆம் திகதியிலிருந்து அத்தியாவசியப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்கள், சேவைகளுக்கு 11 வீதமாக இருந்த வற்வரியானது, 15 வீதமாக அதிகரிப்புச் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.