பொருளாதாரத்தின் மதிப்பை உயர்த்துவேன்- ஜப்பான் பிரதமர்

434 0

201607120308433035_Japan-PM-Shinzo-Abe-said-that-he-tries-to-revise-the_SECVPF (1)ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் லிபரல் ஜனநாயக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்த்து தற்போது ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளன. இது ஜப்பானின் அமைதியை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தை மறு ஆய்வு செய்ய போதுமானதாகும்.தற்போது பிரதமரின் கூட்டணி நாடாளுமன்றத்தின் மேலவைத் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை பெற்று உள்ளது. நாட்டில் துவண்டு வரும் பொருளாதாரத்தின் மதிப்பை உயர்த்த பெரிய ஊக்குவிக்கும் திட்டங்களை வழங்க உள்ளதாக பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலக போரில் ஜப்பான் தோல்வி அடைந்த பிறகு அமெரிக்கா சில தடைகளை ஜப்பான் மீது பிறப்பித்திருந்தது. ஆனால், அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டு வரும் உறுதியான உடன்படிக்கையை கொண்டு வருவது சுலபமான காரியமல்ல என்று அபே கூறியுள்ளார்.