விபத்தில் பிரதேச சபை பெண் உறுப்பினர் பலி

181 0

மீபே – இங்கிரிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீபே – இங்கிரிய வீதியின் அங்கம்பிட்டிய – உலுகெட்டிய பிரதேசத்தில் நேற்று (04) மாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 50 வயதுடைய பாலிந்தநுவர பிரதேச சபை உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.