எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணம் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணமும் அதிரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பில் இருந்து கதிர்காமம் வரையிலான கட்டணம் 1,210 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாத்தறையில் இருந்து கண்டிக்கான கட்டணம் 1,060 ரூபாயாகவும்
கொழும்பில் இருந்து மாத்தறைக்கான கட்டணம் 670 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

