வவுனியாவில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

67 0

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (03) மதியம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண் எரிவாயு கொள்கலனை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தவிர்த்துள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.