திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் ஊழியரை கட்டிப்போட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.
விசாரணையில், அதிகாலை 4 மணியளவில் ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டி, கட்டிப்போட்டு பணம் கொள்ளை போனது என தெரிய வந்தது.
திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

