கட்டபொம்மன் பிறந்தநாளில் நாட்டுப்பற்றுடன் வாழ உறுதியேற்போம்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

238 0

குறுகிய காலமே வாழ்ந்து மறைந்தாலும், நாட்டுக்காக வீரபாண்டிய கட்டபொம்மன் செய்த தியாகங்கள் இந்தப் பூமி உள்ளளவிலும் நிலைத்து நிற்கும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும் தேசியவாதியாகவும், அனைத்துச் சமுதாய மக்களுக்கும் இணக்கமான அரசனாகவும் விளங்கியவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இந்திய விடுதலைப் போரில் தன் வாழ்க்கையைத் துச்சமென நினைத்து அன்னை பாரதத்தின் அடிமைத் தளையைத் தகர்த்தெறிய பாடுபட்டு, வீர மரணம் அடைந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகம் வீண்போகாமல் காலந்தோறும் பிறை மதியென வளர்ந்து விடுதலை பெற உதவியதை நினைத்து அந்தப் பெருமைமிக்க அடிச்சுவட்டில் நாம் அனைவரும் நாட்டுப்பற்றுடன் வாழ்வோம் என்று அவர் பிறந்த நாளான இன்று உறுதி ஏற்போம்.

குறுகிய காலமே வாழ்ந்து மறைந்தாலும், நாட்டுக்காக அவர் செய்த தியாகங்கள் இந்தப் பூமி உள்ளளவிலும் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.