சீனாவின் நம்பிக்கையை எதிர்க்கட்சி வென்றுள்ளது – சஜித்

197 0

ஐக்கிய மக்கள் சக்தியின் மருத்துவ உபகரண நன்கொடை திட்டமான ‘ஹஸ்மாக்’க்கு சீன அரசாங்கம் 19.6 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியது.

சீனத் தூதுவர் Qi Zhenhong யிடமிருந்து நன்கொடையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டார்.

சிறுநீரக நோயாளர்களுக்கான டயாலிசிஸ் இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.

ஒரு வெளிநாட்டு தூதரகம் எதிர்க்கட்சிக்கு நிதி வழங்குவது இதுவே முதல் முறை என குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, சீனாவின் நம்பிக்கையை தம்மால் வெல்ல முடிந்துள்ளது என்றும் பெருமிதம் வெளியிட்டார்.

கொரோனா தொற்று பரவலை அடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள 34 மருத்துவமனைகளுக்கு 101 மில்லியன் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் சஜித் பிரேமதாச கூறினார்.