‘சன்ஷைன் சுத்தாவின்’ கொலையுடன் தொடர்புடைய பிரிதொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் 3 ஆம் திகதி கொடவில பொலிஸ் பிரிவில் ‘சன்ஷைன் சுத்தா’ கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஹேவாதுனுவிலகே லசந்த எனப்படும் ‘டிங்கர் லசந்த’ கைது செய்யப்பட்டார்.
‘சன்ஷைன் சுத்தாவின்’ கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் டிங்கர் லசந்தவுடன் வேனில் பயணித்த சந்தேகநபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தம்புத்தேகம பிரதேசத்தில் கொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வேன் சாரதியாக செயற்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. அத்தோடு இவரிடமிருந்து முச்சக்கரவண்டி, கையடக்க தொலைபேசி மற்றும் 1,002,000 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் 43 வயதுடைய சமித்புர, மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

