புது வருடத்தில் விடுதலையாவேன் – ரஞ்சன் ராமநாயக்க நம்பிக்கை

295 0

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க, புதிய வருடத்தில் விடுதலையாகி உயர் கல்வியை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரான ஹரின் பெர்னாண்டோவிடம் தெரிவித்துள்ளார்.
ஹரின் பெர்னாண்டோ வார இறுதியில் சிறைச்சாலைக்கு நத்தார் விஜயத்தை மேற்கொண்ட போதே .ராமநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

“2022 இல் தான் விடுதலையாகி உயர் படிப்பில் ஈடுபடுவேன் என்று ரஞ்சன் என்னிடம் கூறினார். அவருக்காக எனது பாராளுமன்ற ஆசனத்தை வேண்டுமென்றே தியாகம் செய்வதில் நான் மகிழ்ச்சியடைவேன் என அவரிடம் கூறினேன். அவர் விடுவிக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வேன்” எனவும் அவர் தெரிவித்தார்.