வெளிநாட்டு திருமண அனுமதி தொடர்பான சுற்றறிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்!

285 0

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் தெரிவித்துள்ளது.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க,
திருமணம் மனிதனின் அடிப்படை உரிமை எனவும், இவ்வாறான சுற்றறிக்கை ஒருவரது அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மீறும் செயல் என பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

பதிவாளர் நாயகம் இவ்வாறான சுற்றறிக்கையை வெளியிடும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டவர் எந்தவொரு சட்டவிரோத வர்த்தகம் அல்லது போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு அனுமதிச் சான்றிதழ் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்கள் தங்களது மருத்துவ அறிக்கை , நாள்பட்ட நோய்கள் மற்றும் குறித்த நபர் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா அல்லது தடுப்பூசியைப் பெற்றுள்ளாரா என்பதை விவரிக்கும் சுகாதார அறிவிப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.