இந்திய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

244 0

விப்ரோ நிறுவனர் அமீம் பிரேம்ஜி 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 37.1 பில்லியன்.இந்திய நாட்டில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியல் ஒவ்வெரு ஆண்டும் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொருவரின் ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வரும் முகேஷ் அம்பானி தற்போதும் அந்த இடத்தை தக்க வைத்திருக்கிறார்.

2020-ம் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 104.7 பில்லியன் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது சொத்து மதிப்பு 21.4 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதன் முலம் அவர் இந்திய கோடீஸ்வரர்களில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

அவரது சொத்து மதிப்பு 2019-ம் ஆண்டில் 37 சதவீதம் அதிகரித்தது. அவர் தனது சொத்து மதிப்பை 2020-ம் ஆண்டில் 18.4 பில்லியனாக அதிகரித்தார்.

அவருக்கு அடுத்தபடியாக கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 82.3 பில்லியனாக உள்ளது. அவரது சொத்து மதிப்பு 106.4 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் அவர் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

விப்ரோ நிறுவனர் அமீம் பிரேம்ஜி 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 37.1 பில்லியன். அவருடைய சொத்து மதிப்பு 65.6 சதவீதம் அதிகரித்து உள்ளது.

கோடீஸ்வரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் ஆர்.கே.தாமணியின் சொத்து மதிப்பு 30.1 பில்லியன் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் சிவ் நாடாரின் சொத்து மதிப்பு 26.8 பில்லியனாக இருக்கிறது. கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு 26.4 சதவீதம் அதிகமாகி உள்ளது. அவர் 5-வது இடத்தில் உள்ளார்.