புகையிரத நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் அரசியல் ரீதியானது

472 0

புகையிரத நிலைய அதிபர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக லோகோமோட்டிவ் இன்ஜினியரிங் ஒப்பரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது 10 நிபந்தனைகளுக்கும் இணங்கியதன் பின்னர், திட்டமிட்ட தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளதாக சங்கத்தின் செயலாளரான இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.

அதிகாரிகள் முன்மொழிவுகளை ஏற்றுக்கொண்ட போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவார்களா என்பது தங்களுக்குத் தெரியவில்லை என நிலைய அதிபர்கள் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு புரிந்துணர்வுக்கு வருவதற்காக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாவும், அதன் பின்னர் மீண்டும் ஒரு வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட் -19 தொற்று நோயால் நாடு பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறது, மேலும் அரசியல் கட்சிகளுடன் இணைந்த சில தொழிற்சங்கங்கள் நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன.

இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்புபட்டவர் என்பது அனைவரும் அறிந்த விடயம் எனவும், எனவே இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது அரசியல் உள்நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாக ஒரு முடிவுக்கு வரமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.