இலங்கையில் மேலும் 398 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

286 0

இலங்கையில் மேலும் 398 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் உறுதிபடுத்தப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 583,649 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை முன்னதாக கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 308 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559,436 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 9,329 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.