ஒமைக்ரான் பரவல் எதிரொலி- அமெரிக்காவில் 200 விமானங்களின் சேவை ரத்து

209 0

அமெரிக்கன் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் 112 விமானங்களையும், டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் 90 விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனிடையே அமெரிக்காவில் விமான ஊழியர்கள் பலருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் விமானங்களை இயக்க ஊழியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக அமெரிக்க விமான நிறுவனங்கள் 200-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளன. அமெரிக்கன் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் 112 விமானங்களையும், டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் 90 விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களும் இதே பிரச்சினையை எதிர்கொள்கின்றன. அங்கும் விமான ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக சுமார் 80 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.