சந்தையில் பொருட்களுக்கான விலைகள் நாளாந்தம் அதிகரித்து வருகிறது – வடிவேல் சுரேஷ்

292 0

அடுத்த ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் சந்தையில் பொருட்களுக்கான விலைகள் நாளாந்தம் அதிகரித்து வருவதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹப்புத்தளை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.