போதைப்பொருள் வர்த்தகர் கைது

294 0

கொழும்பிலிருந்து போதைப்பொருளைக் கடத்தி வந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களுக்கு விற்பனை செய்து வந்த நபரொருவர்  நேற்று (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த  நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நபரிடமிருந்து  30 கிராம் ஐஸ் போதைப்பொருளும்  மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 5,40,000 ரூபா எனவும்  பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.