பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் அரசு கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 7,850 இடங்களும் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நாளை நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த 19 படிப்புகளுக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கை தொடங்கி உள்ளது.
பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.ஓ.டி., பி.எஸ்.சி. ரேடியோகிராபி, ரேடியோதெரபி, பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 19 மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,276 இடங்களும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 13,832 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது.
பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் அரசு கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 7,850 இடங்களும் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நாளை நடக்கிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை மறுநாள் (23-ந்தேதி) முதல் நடைபெறுகிறது.
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பில் சேருவதற்கு 64,900 விண்ணப்பங்கள் இணைய தளம் வழியாக பெறப்படுகிறது. மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு 13,832 இடங்கள் உள்ளன.

