வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

175 0

நாடளாவிய ரீதியாகவுள்ள வைத்தியசாலைகளில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமை உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நேற்று இடம்பெற்ற மத்தியக் குழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.