குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர்

303 0

பதுளை – அட்டாம்பிட்டிய, இரண்டாம் பிரிவு தோட்டத்தின் 08 ஆம் இலக்க லயன் குடியிருப்புக்கு அயலிலுள்ள மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

அத்தோடு குடியிருப்புகளுக்குள் வெள்ளநீரும் உட்புகுந்துள்ளமையால் இப்பகுதி மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.